ADDED : ஆக 15, 2024 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: விருத்தாசலத்தில் இருந்து, ஈரோடு கூட்ஸ் ஷெட்டிற்கு நேற்று சரக்கு ரயிலின், 42 பெட்டிகளில் 2,000 டன் நெல் மூட்டைகள் வரத்தானது.
அவற்றை சுமை தொழிலாளர்கள், ரயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றினர். அவை நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து, தனியார் அரிசி அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அரிசியாக்கிய பின் மீண்டும் ரேஷன் கடைகளில், பொது வினியோக திட்டத்தின் மூலம் ரேஷன்கார்டு தாரர்களுக்கு சப்ளை செய்யப்பட உள்ளது.