பு.புளியம்பட்டி நகராட்சியில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்
பு.புளியம்பட்டி நகராட்சியில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : ஜூன் 03, 2026 03:23 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி நகராட்சி கூட்டம் தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் நேற்று நடந்தது. துணை தலைவர் சிதம்பரம்,கமிஷனர் கருணாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
இதை தொடர்ந்து பேசிய வார்டு கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்த பிரச்சனைகளை முன்வைத்து பேசினர். இதற்கு நகராட்சி தலைவர் பதிலளித்து பேசினார். கூட்டத்தில் மொத்தம் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
