ADDED : ஜூன் 03, 2026 03:24 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் நஞ்சப்பா நகர் வாய்க்கால் கரை பகுதியில் நேற்று முன்தினம் கருங்கல்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர்.
அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் ஈரோடு, வீரப்பன்சத்திரம் முனிசிபல் காலனி, அப்பன் நகரை சேர்ந்த மணி மகன் ரேவத்குமார்,28, என்பதும், அவரை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. ரேவத்குமாரை கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
