/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 21,842 மாணவர்கள் தயார்

ADDED : மார் 01, 2024 01:53 AM
ஈரோடு:இன்று துவங்கும் பிளஸ் 2 தேர்வில், ஈரோடு மாவட்டத்தில், 21,842 மாணவ-மாணவிகள் பங்கேற்கவுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. மாவட்டத்தில், 21,702 மாணவ, மாணவிகள், 106 மையங்களில் எழுதவுள்ளனர். இதில்லாமல், 220 மாற்று திறன் மாணவ, மாணவியர், தனி தேர்வர்களாக, 140 பேர் எழுதவுள்ளனர். தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், 1,160 பேர், பறக்கும் படை உறுப்பினர்கள், 375 பேர், துறை அலுவலர்கள், 106 பேர் தேர்வுப்பணியில் ஈடுபடவுள்ளனர். நான்கு மையங்களில் விடைத்தாள் வைக்கப்படும்.
தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம், குடிநீர் உறுதி செய்யப்பட்டுள்ளது. கழிவறை, தேர்வு அறை சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் ஈரோடு மாவட்டம், 96.98 சதவீத தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.