/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் 22 வயது வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
/
16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் 22 வயது வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் 22 வயது வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் 22 வயது வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : டிச 17, 2024 07:33 AM
ஈரோடு: சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், 22 வயது வாலிபருக்கு, ஈரோடு மகிளா நீதிமன்றம், 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
ஈரோடு, ரங்கம்பாளையம் இரணியன் வீதி, அன்னை சத்யா நகரை சேர்ந்த ஈஸ்வரன் மகன் தங்கவேல், 22; சிப்ஸ் கம்பெனி தொழிலாளி. சேலத்தை பூர்வீகமாக கொண்ட, 16 வயது சிறுமி பெற்றோருடன் ஈரோட்டில் வசித்து வந்தார்.
கடந்த, 2019 ஜூலை 11ல் சிறுமியை பைக்கில், கொல்லம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல்
பலாத்காரம் செய்தார். பின்னர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள நண்பரின் அண்ணன் வீட்டுக்கு அழைத்து சென்று,
அங்கும் பலாத்காரம் செய்து, தாலி கட்டியுள்ளார்.மகள் மாயமானது குறித்து அவரது பெற்றோர், சூரம்பட்டி போலீசில் புகார் செய்தனர். விசாரணை நடத்திய போலீசார், 2019 ஜூலை,
14ல் தங்கவேலுவை பிடித்தனர். விசாரணை அடிப்படையில் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில்
வழக்குப்பதிந்து கைது செய்தனர்.இவ்வழக்கு ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சுவர்ணகுமார் நேற்று தீர்ப்பளித்தார். தங்கவேலுக்கு, 20 ஆண்டு
சிறை தண்டனை, ௫,௦௦௦ ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.