/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில் 225 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 225 மனுக்கள் ஏற்பு
ADDED : செப் 09, 2025 01:50 AM
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கந்தசாமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மகளிர் உரிமைத்தொகை, வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றம், போலீஸ் நடவடிக்கை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 225 மனுக்கள் ஏற்கப்பட்டு, தொடர்புடைய துறை விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், இலவசமாக சலவை பெட்டிகள் தலா, 8,781 ரூபாய் மதிப்பில், 10 பேருக்கு வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நுார்ஜஹான் உட்பட பலர் மனுக்கள் பெற்றனர்.