ADDED : ஜூன் 05, 2026 03:55 AM
ஈரோடு:அரசால்
தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், கூல் லிப், ஹான்ஸ் போன்ற
புகையிலை பொருட்களை, போலீஸ் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர்,
உள்ளாட்சி துறையினர், சுகாதாரத்துறை அலுவலர்கள் கூட்டாக ஆய்வு
செய்து, கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஈரோடு
மாநகராட்சி பகுதியில் பல்வேறு பகுதிகளில் கடந்த, 2 முதல் 4ம் தேதி
வரை நடந்த ஆய்வில், பெட்டிக்கடை, டீ ஸ்டால், பேக்கரி, மளிகை
ஸ்டோர்களில், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அக்கடைகளுக்கு
அபராதமாக, 2 லட்சம் ரூபாய் விதிக்கப்பட்டது. கடைகளுக்கு நோட்டீஸ்
வழங்கி மூடப்பட்டது. கடையின் உணவு பாதுகாப்பு உரிமம், தொழில் உரிமம்
ரத்து செய்யப்பட்டது. அதேசமயம் மாவட்ட அளவில் கடந்த ஜன., முதல் மே வரை
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 226 கடைகள் மூடப்பட்டு, 62 லட்சம்
ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு, 488 கிலோ புகையிலை பொருட்கள்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற புகார்களை, 0424 2223545,
94440 42322 என்ற எண்களில் தெரிவிக்கவும், மக்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
