/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லோக் அதாலத்தில் 2,288 வழக்குகளுக்கு தீர்வு
/
லோக் அதாலத்தில் 2,288 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : டிச 16, 2024 03:29 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம், 27.61 கோடி மதிப்பில், 2,288 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம், அந்-தியுர், கொடுமுடி என அனைத்து நீதிமன்றங்களிலும் நேற்று முன்-தினம் நடந்தது. இதில் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்க-ளிலும் நிலுவையில் உள்ள, 6,628 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. இதில், 2,288 வழக்குகளுக்கு, 27 கோடியே, 61 லட்சம் ரூபாய் மதிப்பில் தீர்வு காணப்பட்டது. அதிகபட்சமாக மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு, 39.95 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இரண்டு வழக்கு-களில் கணவன், மனைவி சேர்ந்து வாழ ஒப்புக்கொண்டு இணைந்தனர்.

