ADDED : நவ 18, 2025 01:49 AM
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் 23 எஸ்.ஐ.,க்களை, நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்து எஸ்.பி., சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி கருங்கல்பாளையம் பிரியதர்ஷினி பவானி மகளிர் ஸ்டேஷன், ஈரோடு மதுவிலக்கு பிரிவு பிரகாஷ் பெருந்துறை, பெருந்துறை பாஸ்கரன் சித்தோடு, நெடுஞ்சாலை ரோந்து பிரிவு பழனிச்சாமி தாலுகாவுக்கும், பவானி பகவதியம்மாள் தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். வீரப்பன்சத்திரம் ஷபியுல்லா கடம்பூர், பெருந்துறை ஜீவானந்தம் வீரப்பன்சத்திரம், சென்னிமலை கிருஷ்ணன் பவானிசாகர், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு குழந்தைவேலு பெருந்துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
பவானி குருநாதன் கருங்கல்பாளைய, சித்தோடு பன்னீர்செல்வம் பவானி, சித்தோடு ஹபிபுர் ரஹ்மான் அறச்சலுார், பவானி மகளிர் மகேஷ்வரி சத்தி மகளிர் ஸ்டேஷன், அந்தியூர் தங்கவேல் சென்னிமலை, அந்தியூர் கோபால் பவானிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
வரப்பாளையம் ஈஸ்வரன் தாளவாடி, கடத்துார் ராஜேந்திரன் புளியம்பட்டி, கடத்துார் சண்முக சுந்தரம் அந்தியூர், சத்தி வாசு வீரப்பன்சத்திரம், தாளவாடி பிரபாகரன் வரப்பாளையம், பவானிசாகர் எட்வின் டேவிட் சித்தோடு, பவானிசாகர் சிவக்குமார் சத்தி, கடம்பூர் ஆறுமுகத்தை கடத்துாருக்கும் இடம் மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

