/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடத்தல், கொலை முயற்சி வழக்கில் இலங்கை தமிழருக்கு '23 ஆண்டு'
/
கடத்தல், கொலை முயற்சி வழக்கில் இலங்கை தமிழருக்கு '23 ஆண்டு'
கடத்தல், கொலை முயற்சி வழக்கில் இலங்கை தமிழருக்கு '23 ஆண்டு'
கடத்தல், கொலை முயற்சி வழக்கில் இலங்கை தமிழருக்கு '23 ஆண்டு'
ADDED : பிப் 17, 2024 02:21 AM

ஈரோடு:ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் புவனேந்திரன், 21; கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை காதலித்ததாக கூறப்படுகிறது. கடந்த, 2021ல் திருமணம் செய்து கொள்வதாக மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றார்.
மாணவியின் தாயார் புகாரின்படி, பவானிசாகர் போலீசார் இருவரையும் பிடித்தனர். போலீசார், போக்சோ மற்றும் கடத்தல் வழக்கில், புவனேந்திரனை கைது செய்தனர். இதற்கிடையில் ஜாமினில் வெளியே வந்த வாலிபர், மீண்டும் மாணவிக்கு தொல்லை கொடுத்துள்ளார். கடந்த, 2022 நவ., மாதம் பவானிசாகர் பஸ் ஸ்டாண்ட் அருகே மாணவியை கொலை செய்ய முயன்றார். பவானிசாகர் போலீசார் புவனேந்திரனை கைது செய்தனர்.
வழக்கை விசாரித்த ஈரோடு மகிளா நீதிமன்ற நீதிபதி மாலதி, நேற்று வழங்கிய தீர்ப்பில், போக்சோ, கடத்தல் ஆகிய வழக்கில், 20 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம், மற்றொரு வழக்கில், 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 25,000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்கவும் உத்தரவிட்டார். தவிர அரசு சார்பில், 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கவும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.