/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில் 238 மனு அளிப்பு
/
குறைதீர் கூட்டத்தில் 238 மனு அளிப்பு
ADDED : டிச 31, 2024 06:59 AM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், 238 மனுக்கள் வந்தன.
ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் சார்பில் சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சிறந்த சங்க செயலாளர்கள் மற்றும் சிறந்த தொகுப்பு பால் குளிரூட்டும் நிலைய பொறுப்பாளர்கள் ஒன்பது பேருக்கு பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வழங்கினார்.
டி.ஆர்.ஓ., சாந்தகுமார், உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, டி.ஆர்.ஓ., (ஆவின்) குமரேசன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல் பங்கேற்றனர்.