/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
24 மணி நேரமும் குடிநீர் சப்ளை 6 வார்டுகளில் விரைவில் அமல்
/
24 மணி நேரமும் குடிநீர் சப்ளை 6 வார்டுகளில் விரைவில் அமல்
24 மணி நேரமும் குடிநீர் சப்ளை 6 வார்டுகளில் விரைவில் அமல்
24 மணி நேரமும் குடிநீர் சப்ளை 6 வார்டுகளில் விரைவில் அமல்
ADDED : மார் 04, 2024 07:28 AM
ஈரோடு : ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, சுத்தமான குடிநீர் வழங்க, அம்ரூத் திட்டத்தில், 484.45 கோடி ரூபாய் மதிப்பில், ஊராட்சிக்கோட்டை தனிக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக பவானி அருகே காவிரி ஆற்றில் தண்ணீர் எடுத்து சுத்திகரித்து, ராட்சத குழாய்கள் மூலம், மாநகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டுள்ள, 67 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தேக்கி வைக்கப்படுகிறது. பின் வார்டு வாரியாக இணைப்பு வழங்கப்பட்டுள்ள வீடுகளுக்கு முறை வைத்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் தற்போது கூடுதல் இணைப்பு வழங்கி, சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் மாநகராட்சியில், ௨4 மணி நேரமும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அம்ரூத் 2.0 திட்டத்தில், 20.47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்
பட்டுள்ளது.
இதற்காக மாநகராட்சியில் முதற்கட்டமாக ஆறு வார்டு தேர்வு செய்து, விரைவில் பணி தொடங்கப்படவுள்ளது. இதன்படி நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு, 135 லிட்டர் வீதம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் என்று, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

