/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை டாஸ்மாக் கடை முற்றுகை; போலீஸ் அதிரடி
/
ஈரோட்டில் பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை டாஸ்மாக் கடை முற்றுகை; போலீஸ் அதிரடி
ஈரோட்டில் பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை டாஸ்மாக் கடை முற்றுகை; போலீஸ் அதிரடி
ஈரோட்டில் பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை டாஸ்மாக் கடை முற்றுகை; போலீஸ் அதிரடி
ADDED : ஜன 03, 2025 01:07 AM
ஈரோடு, ஜன. 3-
ஈரோட்டில் கனிராவுத்தர்குளம் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை (எண்:3527) செயல்படுகிறது. கடையை ஒட்டிய வீட்டில் பார் செயல்படுகிறது. டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில் பாரில் மது விற்றுள்ளனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது. பெண்கள், குழந்தைகள் அதிகாலையில் சாலையில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடையை அகற்றுமாறு மக்கள், நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை, 40க்கும் மேற்பட்ட மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வீரப்பன் சத்திரம் போலீசார், ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன், டாஸ்மாக் உதவி மேலாளர் ஜெயக்குமார் ஆகியோர், பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மக்கள் கூறியதாவது:- இப்பகுதியில், 200 குடும்பங்கள் உள்ளன. மது அருந்திவிட்டு வெளியே வருபவர்கள், அவ்வழியே செல்லும் பெண்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்கின்றனர். இளைஞர்கள் தகராறு செய்கின்றனர். தட்டிக்கேட்டால் எங்களை அடிக்க வருகின்றனர். 24 மணி நேரமும் மது விற்கின்றனர். கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார். கடையை வேறிடத்துக்கு மாற்றுவதாக அதிகாரிகள் உறுதி கூறவே, அரை மணி நேரத்தில் போராட்டத்தை கைவிட்டு மக்கள் சென்றனர். இதனிடையே மக்கள் குற்றஞ்சாட்டிய வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதில், 37 மது பாட்டில்கள் சிக்கின. டாஸ்மாக் கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், சட்ட விரோத மது விற்றதாக இருவரை, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் இருவரும் கனிராவுத்தர் குளம் பகுதி ரவிச்சந்திரன், 55, பாலமுருகன், 28, என்பது தெரிந்தது. இருவர் மீதும் வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.