/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதல் போக நெல் சாகுபடிக்கு 24 டன் விதை நெல் விற்பனை
/
முதல் போக நெல் சாகுபடிக்கு 24 டன் விதை நெல் விற்பனை
முதல் போக நெல் சாகுபடிக்கு 24 டன் விதை நெல் விற்பனை
முதல் போக நெல் சாகுபடிக்கு 24 டன் விதை நெல் விற்பனை
ADDED : ஆக 23, 2025 01:53 AM
கோபி, பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில் முதல் போக நெல் பாசனத்துக்கு கடந்த, 1ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து விதை நெல் விற்பனை, கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தொடங்கியது.
ஐ.ஆர்., 20 ரகம் கிலோ, 45 ரூபாய் விலையில், ௧௦ டன்; பவானி ரகம் கிலோ, 45 ரூபாய் விலையில் நான்கு டன்; ஏ.எஸ்.டி., 16 ரகம் கிலோ, 43 ரூபாய் விலையில் இரு டன்; பி.பி.டி., 5204 ரகம் கிலோ, 45 ரூபாய் விலையில் எட்டு டன்னும் விற்பனையாகி உள்ளது. இதுவரை, 24 டன் விதை நெல், 10.76 லட்சம் ரூபாயக்கு விற்றுள்ளது. இன்னும் ஏ.எஸ்.டி., 16 ரகம், 4,795 கிலோ, பி.பி.டி., 5204 ரகம், 27 டன்னும் இருப்பில் உள்ளதாக, சங்க
அதிகாரிகள் தெரிவித்தனர்.