/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தம்பிக்கலை ஐயன் கோவிலில் அன்னதான கூடம் திறப்பு
/
தம்பிக்கலை ஐயன் கோவிலில் அன்னதான கூடம் திறப்பு
ADDED : ஆக 23, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் டவுன் பஞ்., தங்கமேடு தம்பிக்கலை ஐயன் கோவிலில், தமிழக அரசு சார்பில் தினமும் நுாறு பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான கூடம் இல்லாத நிலையில், ௧.௧௦ கோடி ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம் கட்டி முடிக்கப்பட்டது.
இதை முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொலி காட்சியில் நேற்று திறந்து வைத்தார். இந்த கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் பரிமாறப்படுவதை, கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.