/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறை சப்--டிவிஷனில் தோட்டத்து வீடுகளில் 2,416 முதியோர் கண்காணிப்பு
/
பெருந்துறை சப்--டிவிஷனில் தோட்டத்து வீடுகளில் 2,416 முதியோர் கண்காணிப்பு
பெருந்துறை சப்--டிவிஷனில் தோட்டத்து வீடுகளில் 2,416 முதியோர் கண்காணிப்பு
பெருந்துறை சப்--டிவிஷனில் தோட்டத்து வீடுகளில் 2,416 முதியோர் கண்காணிப்பு
ADDED : மே 10, 2025 01:16 AM
ஈரோடு, சிவகிரி அருகே நடந்த இரட்டை கொலையால், பெருந்துறை சப்-டிவிஷனில் பண்ணை மற்றும் தோட்டத்து வீடுகளில் வசிக்கும், 2,416 முதியவர் விபரம் கணக்கெடுத்து, கண்காணித்து வருகின்றனர்.
சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்த ராமசாமி, 75, - பாக்கியம், 65, தம்பதி, சமீபத்தில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். 11 பவுன் நகை, பணம் கொள்ளை போனது. எஸ்.பி., சுஜாதா தலைமையில், 10 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடும் பணி நடக்கிறது. இதில்லாமல், 21 போலீஸ் குழுவினர், துப்பாக்கியுடன் வாகன ரோந்து நடத்துகின்றனர்.
சிவகிரி போல் மீண்டும் நடக்காமல் தடுக்க, ஈரோடு, நீலகிரி, நாமக்கல் மாவட்ட போலீசார் கொண்ட, 68 குழு அமைத்து, தோட்டத்து வீடு, பண்ணை வீட்டில் தனியாக வசிக் கும் முதியோர், குடும்பமாக வசிப்போர் விபரம் சேகரித்து, இரவு, பகலாக கண்காணிக்கின்றனர்.
பெருந்துறை சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பெருந்துறை, காஞ்சிகோவில், சென்னிமலை, அரச்சலுார், வெள்ளோடு, கொடுமுடி, சிவகிரி, மலையம்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில் கண்காணிக்கப்பட வேண்டிய, தனியாக வசிப்போர் விபரம் சேகரித்துள்ளனர். இதன்படி சிவகிரியில்-258 வீடுகள், பெருந்துறை சப்-டிவிஷனில், 2,000 வீடுகள் உட்பட, 2,416 முதியோர் தனியாக வசிப்பது தெரிய வந்து, அவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. 'சிசிடிவி' கேமரா பொருத்தாத வீடுகள், பண்ணை வீடுகள், தோட்டத்து வீடுகளில் கேமரா பொருத்த போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.