/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆப்பக்கூடல் ஏரிக்கரையோரத்தில்ஆக்கிரமிப்பு நிலம் 2.5 ஏக்கர் மீட்பு
/
ஆப்பக்கூடல் ஏரிக்கரையோரத்தில்ஆக்கிரமிப்பு நிலம் 2.5 ஏக்கர் மீட்பு
ஆப்பக்கூடல் ஏரிக்கரையோரத்தில்ஆக்கிரமிப்பு நிலம் 2.5 ஏக்கர் மீட்பு
ஆப்பக்கூடல் ஏரிக்கரையோரத்தில்ஆக்கிரமிப்பு நிலம் 2.5 ஏக்கர் மீட்பு
ADDED : மார் 19, 2025 01:44 AM
ஆப்பக்கூடல் ஏரிக்கரையோரத்தில்ஆக்கிரமிப்பு நிலம் 2.5 ஏக்கர் மீட்பு
பவானி:பவானி அருகே சத்தி சாலையில் உள்ள ஆப்பக்கூடல் ஏரி, 126 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
ஆப்பக்கூடல் டவுன் பஞ்., புதுப்பாளையத்தில் ஏரி கரையோரம், வேம்பத்தி பஞ்., வெள்ளாளபாளையத்தில் ஏரி கரையோரம், 2.5 ஏக்கர் நிலம் ஆக்கிரமித்து, விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இதையறிந்த பொதுப்பணித்துறையினர் சில மாதங்களுக்கு முன் ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து ஆக்கிரமித்த விவசாயிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். அதையும் மீறி விவசாயத்தை தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் நீர்வளத்துறை உதவி பொறியாளர் முகமது சுலைமான், ஆப்பக்கூடல் போலீசாருடன் நேற்று ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டார். அப்பகுதியில் உள்ள, ௫௦க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் ஏலம் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.