/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க.,வினர் 25 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
தி.மு.க.,வினர் 25 பேர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஜூன் 30, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை வடக்கு ஒன்றியம் பனியம்பள்ளி ஊராட்சி, தோப்புபாளையத்தை சேர்ந்த நந்தகுமார் உட்பட, 25 பேர் தி.மு.க.,விலிருந்து விலகி, முன்னாள் அமைச்சர் கருப்பணன் தலைமையில், பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயக்குமார் முன்னி-லையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
பள்ளக்காட்டூர் முன்னாள் தி.மு.க., செயலாளர் கோவிந்தராஜ், கிளை செயலாளர் ராஜேந்திரன், சண்முகம், லலித், கிரி உட்பட, 25 பேர் தி.மு.க.,வில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் இணைந்தனர். சென்னிமலை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு கார்த்தி உட்பட பலர் இருந்தனர்.