ADDED : ஜூலை 03, 2026 04:20 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் 26 தாசில்தார்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கான உத்தரவை கலெக்டர் கந்தசாமி நேற்று பிறப்பித்தார்.
இடம்
மாற்றம் விபரம் (தாசில்தார் பெயர், பணிபுரிந்த இடம் - மாறுதல்
செய்யப்பட்ட இடம்):
ஈரோடு தனி (முத்திரைகள்) எஸ்.கற்பகம் - பவானி;
தமிழ்நாடு வாணிப கழகம் கிடங்கு மேலாளர் பரிமளாதேவி - கொடுமுடி;
கொடுமுடி தாசில்தார் கேசவமூர்த்தி-கோபி ஆர்.டி.ஓ., நேர்முக
உதவியாளர்; கோபி ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் பெரியசாமி -
அந்தியூர் சமூக பாதுகாப்பு திட்டம் (ச.பா.தி.,); அந்தியூர் (ச.பா.தி.,)
கணேசன் - ஈரோடு (ச.பா.தி.,) தாசில்தார்; ஈரோடு (ச.பா.தி.,) தாசில்தார்
கார்த்திக் - சத்தியமங்கலத்துக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.
சத்தி
ஜமுனாராணி - பவானி (ச.பா.தி.,) தாசில்தார்; பவானி (ச.பா.தி.,)
தாசில்தார் குமரேசன் - கோபி; கோபி கவியரசு - கோபி கோட்ட கலால்
அலுவலர்; ஈரோடு டி.எஸ்.ஓ., நேர்முக உதவியாளர் சக்திவேல் - அந்தியூர்
தாசில்தார்; அந்தியூர் இளஞ்செழியன் - ஈரோடு தமிழ்நாடு வாணிப கழக
கிடங்கு மேலாளர்; பெருந்துறை சரவணன் - தாளவாடி; தாளவாடி மாரிமுத்து -
தாளவாடி (ச.பா.தி.,) தாசில்தார்; தாளவாடி (ச.பா.தி.,) தாசில்தார்
ஜாகீர்உசேன் - ஈரோடு டி.எஸ்.ஓ., நேர்முக உதவியாளராக
மாற்றப்பட்டார்.
கோவை மாவட்ட அலகு நிலமெடுப்பு மற்றும் மேலாண்மை
அலகு தனி தாசில்தார் மோகனா - மொடக்குறிச்சி தாசில்தார்;
மொடக்குறிச்சி சிவசங்கர் - ஈரோடு உதவி ஆணையர் அலுவலக தனி தாசில்தார்
(கோவில் நிலங்கள்); ஈரோடு உதவி ஆணையர் அலுவலக தனி தாசில்தார் (கோவில்
நிலங்கள்) செல்வகுமார் - பெருந்துறை; ஈரோடு முத்துகிருஷ்ணன் -
ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தனி தாசில்தார்
(பறக்கும் படை); ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தனி
தாசில்தார் (பறக்கும் படை) பி.ஜெயகுமார் - ஈரோடு கோட்ட கலால் அலுவலர்;
ஈரோடு கோட்ட கலால் அலுவலர் கதிர்வேல் - ஈரோடு ஆர்.டி.ஓ., நேர்முக
உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு ஆர்.டி.ஓ., நேர்முக
உதவியாளர் அமுதா - ஈரோடு தனி தாசில்தார் (முத்திரைகள்); ஈரோடு மாவட்ட
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தனி தாசில்தார்
(கல்வி உதவித்தொகை) சங்கர்கணேஷ் - ஈரோடு மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்; ஈரோடு மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பூபதி - கோவை மாவட்ட அலகு
நிலமெடுப்பு மற்றும் மேலாண்மை அலகு தனி தாசில்தார்; ஈரோடு தேசிய
நெடுஞ்சாலை (திட்டங்கள்) நிலம் எடுப்பு தனி தாசில்தார் அசரபுனிஷா -
ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தனி
தாசில்தார் (கல்வி உதவித்தொகை); சத்திமங்கலம் தேசிய நெடுஞ்சாலை
அலகு-2 நிலம் எடுப்பு தனி தாசில்தார் வேல்முருகன் - கொடுமுடி சமூக
பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்; சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை
அலகு-1 நிலம் எடுப்பு தாசில்தார் கவிதா - ஈரோடு தாசில்தார்.
