சென்னிமலை-பெருந்துறை ரோட்டில் ஆட்டோமேடிக் அபராத கேமரா என வதந்தி
சென்னிமலை-பெருந்துறை ரோட்டில் ஆட்டோமேடிக் அபராத கேமரா என வதந்தி
ADDED : ஜூலை 03, 2026 04:19 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:பெருந்துறை
- -சென்னிமலை ரோட்டில் தானியங்கி சிக்னல் மற்றும் ஏ.ஐ., கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் விதிமீறலில் ஈடுபட்டால்
தானாகவே அபராதம் விதிக்கப்படும் என்றும் கடந்த சில நாட்களாகவே, ஒரு
செய்தி பரவி வருகிறது. தலைகவசம் மற்றும் சீட் பெல்ட்
அணியாதவர்களுக்கு தானாக அபராதம் விதிக்கப்படும் என்ற தகவல், வாகன
ஓட்டிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார்
கூறியதாவது: இது முற்றிலும் பொய். அப்படி எதுவும்
அமைக்கப்படவில்லை. இது வதந்திதான் என்றாலும், டூவீலரில் செல்வோர்
ஹெல்மெட் அணிவது, காரை இயக்குபவர் சீட் பெல்ட் அணிவது நல்ல விஷயம்
தானே? கேமராவுக்கு பயந்து விதியை மீறி விட்டாமோ என கருதாமல், சொந்த
பாதுகாப்புக்காக விதிகளை கடைபிடியுங்கள். இவ்வாறு கூறினர்.
