/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 264 மனுக்கள் ஏற்பு
/
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 264 மனுக்கள் ஏற்பு
ADDED : அக் 28, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமி தலைமையில், டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
மகளிர் உரிமைத்தொகை, விதவை உதவித்தொகை, கருணை அடிப்படை பணி உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 264 கோரிக்கை மனுக்கள் ஏற்கப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
முதல்வரின் தனிப்பிரிவு, அமைச்சர்கள் மூலம் வரப்பெற்ற மனுக்கள் மீதும், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் விரைவான நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

