ADDED : டிச 14, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,: ஈரோடு மாவட்டத்தில் வரும், 27ம் தேதி முதல், 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடக்க உள்ளது.
நீர் நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து, அவற்றை பாதுகாக்கும் முயற்சியாக, ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு ஆண்டு தோறும் வனத்துறையால் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு கணக்கெடுப்பு வரும், 27, 28ல் நடக்கவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சத்திய-மங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு வனக்கோட்ட பகுதி ஏரிகள், குளங்கள், நீர் நிலைகள் என, 21 இடங்களில் கணக்கெ-டுப்பு நடக்கிறது. இத்தகவலை ஈரோடு மாவட்ட வன அலுவலர் குமிலி அப்பால நாயுடு தெரிவித்துள்ளார்.

