/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.2.87 லட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை
/
ரூ.2.87 லட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை
ADDED : மார் 20, 2025 01:42 AM
ரூ.2.87 லட்சத்துக்கு விளைபொருட்கள் விற்பனை
ஈரோடு:மொடக்குறிச்சி உப ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 11,464 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. ஒரு கிலோ தேங்காய், 42.66 முதல், 61.38 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 3,734 கிலோ எடை கொண்ட தேங்காய், இரண்டு லட்சத்து, 11 ஆயிரத்து, 900 ரூபாய்க்கு விலை போனது. கொப்பரை தேங்காய், 62 மூட்டை வரத்தாகி முதல் தரம் ஒரு கிலோ, 160.79 முதல், 171.70 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 102.60 முதல், 147.05 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், 1,116 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், 1 லட்சத்து, 75 ஆயிரத்து, 183 ரூபாய்க்கு விற்பனையானது.
தேங்காய், கொப்பரை தேங்காய் ஆகியவை சேர்ந்து, மூன்று லட்சத்து, 87 ஆயிரத்து, 83 ரூபாய்க்கு விற்பனையானது.

