ADDED : நவ 24, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில் பொது இடத்தில், மது குடிப்போரை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த வகையில் நேற்று முன்தினம் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக மது குடித்ததாக, 29 வழக்குகளை பதிவு செய்து, 29 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகரில், சந்துக்கடையில் விற்க, டாஸ்மாக் மது பாட்டிலை பதுக்கிய, கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகர் மாணிக்கம் மனைவி மணியம்மாள், 67; பெருந்துறை பணிக்கம்பாளையத்தில், சந்துக்கடையில் மது விற்ற, பிரதீப் தாஸை, 37, ஈரோடு மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
