ADDED : நவ 24, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயசாரதி, 45; ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலை பள்ளி சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர். இவர், 13 வயது மாணவிகள் நான்கு பேருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தது குறித்து, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதுபற்றி பள்ளி கல்வி துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விஜயசாரதியை நேற்று சஸ்பெண்ட் செய்து, ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் மான்விழி உத்தரவிட்டார்.
