ADDED : மார் 27, 2024 03:52 PM
பவானி: பவானி அருகே தளவாய்ப்பேட்டையில், தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள், வாகன தணிக்கையில் நேற்றிரவு ஈடுபட்டிருந்தனர். ஈரோட்டிலிருந்து அத்தாணி வழியாக கள்ளிப்பட்டி சென்ற காரை சோதனையிட்டனர். ரதிமாலா என்பவரிடம், ௨.௯௨ லட்சம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாததால், பறிமுதல் செய்தனர். பவானி கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
* தாராபுரத்தில் அலங்கியம் சாலையில், வாய்க்கால் பாலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தாராபுரம், கொளிஞ்சிவாடியை சேர்ந்த பாலகுமார் வந்த காரில் சோதனை செய்தனர். உரிய ஆவணங்களின்றி, 91 ஆயிரம் ரூபாய், 15 கிராம் தங்க நகை எடுத்து வரப்பட்டது தெரிந்தது. பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, மீட்டுக் கொள்ளும்படி கூறினர்.

