/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூலி தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
/
கூலி தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
ADDED : ஜூலை 22, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு அருகே கஸ்பாபேட்டை கள்ள கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி, 36, கூலி தொழிலாளி. முள்ளாம்பரப்பு செக்குமேடு பகுதியில் மொபைல் போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது வந்த கஸ்பாபேட்டை காராளன் மகன் சுதாகர், 38; துய்யம்பூந்துறை ஈஸ்வரன் மகன் கோபிநாத், 27; கஸ்பாபேட்டை நடுகவுண்டன்பாளையம் சுப்பிரமணி மகன் சசிகுமார், 32; ஆகியோர் வம்புக்கு இழுத்து தகராறு செய்துள்ளனர்.
அப்போது மூவரும் சாலையில் கிடந்த காலி பீர் பாட்டிலால் கார்த்தி முகத்தில் அடித்து சரமாரியாக தாக்கினர். காயமடைந்த கார்த்தி ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அவரது புகாரின் பேரில் மூவரையும், தாலுகா போலீசார் கைது செய்தனர்.