/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மளிகை கடைக்காரரை தாக்கிய 3 பேர் கைது
/
மளிகை கடைக்காரரை தாக்கிய 3 பேர் கைது
ADDED : ஆக 05, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம், கடம்பூரை அடுத்த கோட்டமாளத்தை சேர்ந்தவர் ரவி, 40; சிறிய அளவில் மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் கடை நடத்தி வருபவர் பாக்யா. இருவருக்கும் சில நாட்களுக்கு முன் வாய் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கடம்பூர் சென்ற ரவி, நேற்று முன்தினம் மதியம் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது பாக்யாவின் பேரன் குணசேகர், அவரது நண்பர்கள் இருவர் சேர்ந்து, பாட்டியை எதற்கு திட்டினாய்? என கேட்டு தாக்கியதில் ரவி காயமடைந்தார். ரவி அளித்த புகாரின்படி கடம்பூர் போலீசார் வழக்குப்பதிந்து, குணசேகர், 21, கலையரசன், 24, மாரிமுத்து, 21, ஆகியோரை கைது செய்தனர்.