/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வங்கி கணக்கு துவங்கி மோசடி செய்ய முயற்சி: 3 பேர் கைது
/
வங்கி கணக்கு துவங்கி மோசடி செய்ய முயற்சி: 3 பேர் கைது
வங்கி கணக்கு துவங்கி மோசடி செய்ய முயற்சி: 3 பேர் கைது
வங்கி கணக்கு துவங்கி மோசடி செய்ய முயற்சி: 3 பேர் கைது
ADDED : டிச 03, 2024 07:29 AM
ஈரோடு: கமிஷன் கொடுத்து, வங்கி கணக்கு துவங்கி, ஆன்லைனில் பண மோசடி செய்ய முயன்ற,
சத்தியமங்கலத்தை சேர்ந்த மூவரை, ஈரோடு சைபர் கிரைம் போலீசார் கைது
செய்தனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புதுப்பீர்கடவு பகுதியை சேர்ந்தவர்
ராமகிருஷ்ணன், 36; இவரிடம் அதே பகுதியை சேர்ந்த மூவர், தங்கள் பெயரில் வங்கி
கணக்கு தொடங்கி அனைத்து ஆவணங்களையும் தாங்களே வைத்து கொள்வதா-கவும்,
அதற்கு கமிஷனாக, 2,500 ரூபாய் தருவதாகவும் கூறியுள்-ளனர். இதனால் வங்கி
கணக்கு தொடங்க, ராமகிருஷ்ணன் சில ஆவணங்களை கொடுத்துள்ளார். தனியார்
வங்கியில் கணக்கு தொடங்கி, வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம்.கார்டு, செக் புத்-தகம்
உள்ளிட்டவற்றை அவர்களே வைத்துக் கொண்டனர்.தனக்கு தெரிந்தவர்களிடம் இதுகுறித்து ராமகிருஷ்ணன் கூறிய-போது, ஆன்லைன்
மோசடி கும்பலாக இருக்கலாம். அவர்கள் செய்யும் மோசடி பணம் நம் வங்கி கணக்கு
வந்தால், போலீசார் நம்மை தான் கைது செய்வார்கள் என எச்சரித்துள்ளனர். இதனால்
பயந்து போனவர், ஈரோடு சைபர் கிரைம் போலீசில் கடந்த மாதம், 30ம் தேதி புகாரளித்தார்.
போலீசார் விசாரணையில், ராமகி-ருஷ்ணனுக்கு கமிஷன் கொடுத்து, வங்கி கணக்கு
தொடங்கியது, சத்தியமங்கலம், புதுப்பீர் கடவு மணியன் மகன் விஜயன், 30, சுப்-புராஜ்
மகன் சத்தியமூர்த்தி, 29; சத்தியமங்கலம், ரங்கசமுத்திரம் செல்வராஜ் மகன்
ஹரிஹரசுதன், 20, என தெரியவந்தது. ஈரோடு சைபர் கிரைம் போலீசார் மூவரையும்
நேற்று பிடித்து விசாரித்-தனர்.இதேபோல் சத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல-ரிடம், வங்கி கணக்கு
தொடங்கி, அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக கொடுத்து, வங்கி
தொடர்பான அனைத்து ஆவணங்களையும், கவுதம் என்பவருக்கு வழங்கியதும்
தெரிய வந்தது. இந்த வங்கி கணக்குகளை, ஆன்லைன் பண மோசடிக்கு பயன்படுத்த
இருந்ததும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்-தது. மூவரையும் போலீசார் கைது
செய்தனர்.அவர்களிடம் இருந்து இரண்டு ஏ.டி.எம்.கார்டு, இரு வங்கி கணக்கு புத்தகம், ஒரு செக் புக்,
ஒரு ஐபோன் உள்ளிட்ட ஆறு ஸ்மார்ட் போன்கள், 12,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
சத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 20 பேரிடம் வங்கி கணக்கு துவங்கி
மோசடியில் ஈடுபட முயன்றுள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கவுதம்
உள்ளிட்டோரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.