/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர் அருகே மோட்டார் திருடிய 3 பேர் கைது
/
அந்தியூர் அருகே மோட்டார் திருடிய 3 பேர் கைது
ADDED : மே 17, 2025 01:13 AM
அந்தியூர் அந்தியூர் அருகே புதுப்பாளையம் ஏரி தோட்டத்தை சேர்ந்த விவசாயி அருள், 40; இவரது தோட்டத்து கிணற்றின் அருகே, சந்தேகத்துக்கிடமாக ஒரு பைக் நேற்று நிறுத்தப்பட்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபோது, இரண்டு பேர் மோட்டார் அறையில் இருந்த பழைய மோட்டார், ஸ்டார்ட்டர், மோட்டார் பம்ப் உள்ளிட்டவற்றை திருடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அவர் சத்தமிடவே இருவரும் தப்பி ஓடினர். இதில் அந்தியூர், வெள்ளைப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த பிரதீப், 26, பிடிபட்டார். அந்தியூர் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்தியூர், தேர்வீதி யுவராஜ், 39, என்பவருடன் சேர்ந்து திருட சென்றது தெரிந்தது. இந்நிலையில் யுவராஜை பிடித்த போலீசார், இவர்களுடன் சேர்ந்து மற்றொரு மோட்டார் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த மனோஜ், 39, என்பவரையும் கைது செய்தனர். மூவரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.