ADDED : அக் 07, 2026 06:27 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில், மாநில குழந்தைகள்
உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு
ஆய்வு நடக்கிறது.
ஆணைய தலைவர் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களை
கொண்ட குழுவினர், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் பள்ளியின்
துாய்மை, சுகாதாரம், ஆசிரியர்களின் கற்றல், கற்பித்தல் முறை,
சத்துணவு அறை, உள் கட்டமைப்பு வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு
மேற்கொள்வர்.
இதுகுறித்த ஆய்வறிக்கை அரசிடம்
சமர்பிக்கப்பட்டு, தேவைப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்
கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
