ADDED : அக் 07, 2026 06:26 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்
அருகே தோப்பூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், சேலம்
மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த ராமசாமி மகன் விக்னேஷ், 13, விடுதியில்
தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று காலை, 6:30 மணி
வரை விடுதியில் இருந்த மாணவன், 7:00 மணிக்கு குளிக்க சென்றார். அதன் பிறகு
காலை உணவுக்கு வரவில்லை. விடுதி வார்டன், ஆசிரியர்கள் தேடியும்
கிடைக்கவில்லை. பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின்படி அந்தியூர்
போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.
