/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ளகோவில் அருகே நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் பலி
/
வெள்ளகோவில் அருகே நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் பலி
ADDED : நவ 13, 2024 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:வெள்ளகோவில்
அருகேயுள்ள செங்காளிபாளையம் திருமகல் நகரை சேர்ந்த விவசாயி
நல்லசாமி, 51; செங்காளிபாளையத்தில் உள்ள தனது தோட்டத்தில், 30
ஆடுகள் மற்றும் கால்நடைகளை வைத்து விவசாயம் செய்கிறார்.
நேற்று அதிகாலை தோட்டத்துக்கு சென்றபோது, மூன்று ஆடுகள் இறந்து கிடந்தன.
தெருநாய்கள்
கடித்து ஆடுகள் பலியாகி விட்டதாக கூறியவர், வி.ஏ.ஓ., மற்றும் கால்நடை
மருத்துவருக்கு தகவல் தெரிவித்து, இறந்த ஆடுகளை அதே பகுதியில்
புதைத்தார். பலியான ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
விடுத்துள்ளார்.