ADDED : ஜன 21, 2025 06:45 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 58 வேட்பாளர்கள், 65 வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். கடந்த, 18ல் மூன்று மனு தள்ளுபடியானது. நேற்று ஏழு பேர் மனுவை வாபஸ் பெற்றனர். இதுபற்றி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் கூறியதா-வது: ஈரோடு கிழக்கு தொகுதியில், 47 வேட்பாளர்கள் போட்-டியில் உள்ளனர். நோட்டாவுடன் சேர்த்து, மின்னணு ஓட்டுப்ப-திவு இயந்திரத்தில் பொறுத்தப்படும் ஓட்டுச்சீட்டில், 48 இடங்கள்
இடம் பிடிக்கும்படி பிரிண்ட் ஆகும்.
வேட்பாளர்களின் சின்னத்தை இறுதி செய்ததும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையிலான குழுவினர் சென்னைக்கு சென்று, இறுதி வேட்பாளர் விபரம், சின்னங்கள் விபரத்தை தலைமை தேர்தல் ஆணையர்
அலுவலகத்தில் ஒப்படைத்து, ஓட்-டுச்சீட்டு பிரிண்ட் செய்வதற்கான பணிகளை துவங்குவர். இவ்-வாறு கூறினார். ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 16 பேர் பெயர் இடம் பெறும். தற்போது, ௪௭ பேர் போட்டியிடு-வதால்,
ஒவ்வொரு பூத்திலும் மூன்று ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

