/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆட்டை திருடி இறைச்சியாக்கி விற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

ADDED : அக் 21, 2024 07:26 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதியில், அடிக்கடி ஆடுகள் திருட்டு போனது. சந்தேகத்தின் பேரில் ஒரு ஆட்டிறைச்சி கடைக்காரரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் குடும்பத்துடன் ஆடு திருட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் கூறியதாவது: திருவண்ணாமலை, அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம், 47; ஈரோடு அருகே 46 புதுார் வெள்ளாளபாளையத்தில் வசிக்கிறார். இவரின் மனைவி சகுந்தலா, 42; வாய்க்கால் மேடு, நாமக்கல் மாவட்டம் கொக்கராயன் பேட்டையில் மட்டன் கடை நடத்தி வருகிறார். இவர்களின் மகன் கார்த்திக், 27; மூவரும் சேர்ந்து இதுவரை, 12 ஆடுகளை திருடியுள்ளனர். திருடிய ஆட்டை கொன்று இறைச்சியாக விற்றதை ஒப்பு கொண்டனர். மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தந்தை, மகனை ஈரோடு கிளை சிறையிலும், சகுந்தலா திருப்பூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.