ADDED : நவ 22, 2026 06:30 AM
அ நிறம் | அளவு
பவானி,:சித்தோடு அருகே விவசாயத்
தோட்டம் மற்றும் நசியனுார் டவுன் பஞ்., போர்வெல் கிணறுகளில், மும்முனை மின்
ஒயர் திருட்டு போனது. புகாரின்படி சித்தோடு போலீசார் விசாரணையில்
ஈடுபட்டனர்.
இதில் ஆர்.என்.புதுாரை சேர்ந்த ஜெயக்குமார், 22, ஆனந்த்,
20, ஹரி, 20, பெருமாள்மலையை சேர்ந்த தங்கமணி, பிரபு என ஐந்து பேர்
ஈடுபட்டதை கண்டுபிடித்தனர். ஜெயக்குமார், ஆனந்த், ஹரியை கைது செய்த
நிலையில், மற்ற இருவரை தேடி வருவதாக தெரிவித்தனர். மூவரிடமும் இருந்து, 175
மீட்டர் நீள காப்பர் ஒயரை மீட்டனர். பவானி குற்றவியல் நடுவர்
நீதிமன்றத்தில் மூவரையும் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.
