ADDED : நவ 22, 2026 06:31 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு-காவிரி
ரயில்வே ஸ்டேஷன் இடையே, 20ம் தேதி காலை, மங்களூரு-சென்னை ரயிலில் அடிபட்டு
ஒருவர் பலியானார். முகம் முழுமையாக சிதைந்தது.
பலியான நபரின் உடல்
பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பலியானவர் யார்?. எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. மாநிறத்தில்
இருந்தார். தொப்புளுக்கு கீழ் ஒரு கருப்பு மச்சம். இடது கை மணிகட்டுக்கு
கீழ் ஒரு கருப்பு மச்சம் இருந்தது.
சிவப்பு கலர் பாக்கெட் வைத்த ஜட்டி,
அதில் சி.பி.ஐ., பிளஸ் என எழுதபட்டிருந்தது. கருப்பு கலர் காலர் வைத்த
டி-சர்ட், புளூ கலரில் வெள்ளை கலர் பூ போட்ட அரை கால் டிராயர்
அணிந்திருந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
