ADDED : நவ 22, 2026 06:32 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:அறச்சலுார்
வடபழனியை சேர்ந்தவர் ஸ்ரீராம், 45; திருமணம் ஆகாதவர். குடிப்பழக்கத்துக்கு
ஆளான நிலையில், வேலைக்கு செல்லாமல், வட பழனி டாஸ்மாக் கடை பகுதியில்
சுற்றி திரிவார்.
நேற்று அதிகாலை டாஸ்மாக் கடை முன்புறம் கிடந்தார்.
தகவலின்படி சென்ற அறச்சலுார் போலீசார் உடலை மீட்டு, ஈரோடு அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீராமின் இடது கையில் எலும்பு
முறிவும், உடம்பில் மொக்கை காயமும் காணப்பட்டது. கொலை செய்யப்பட்டிருக்க
கூடும் என்ற கோணத்தில் அறச்சலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
