ADDED : ஜன 04, 2026 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, பக்தர்களின் பயன்பாட்டிற்காக, மூன்று புதிய மினி பஸ் சேவையை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார்.
தற்போதுள்ள இரண்டு பஸ் போதுமானதாக இல்லை. இந்நிலையில், 1.23 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று புதிய மினி பஸ் வாங்கப்பட்டு, நேற்று முதல் சேவையை தொடங்கின. கோவிலில் நடந்த விழாவில் இந்து சமய அறநிலைய துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சுகுமார், பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், கோவில் செயல் அலுவலர் சரவணன், அறங்காவலர் குழுத்தலைவர் பழனிவேல், குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

