/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
3 பஞ்.,கள் பிரிப்பு; கருத்து தெரிவிக்கலாம்
/
3 பஞ்.,கள் பிரிப்பு; கருத்து தெரிவிக்கலாம்
ADDED : டிச 19, 2025 07:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர், சத்தி, தாளவாடி யூனியன்களில் மலைப்பகுதி சார்ந்த, மூன்று பஞ்.,கள் பிரிக்கப்பட்டு, 12 புதிய பஞ்.,களாக ஆணை வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட அரசிதழில் கடந்த, 13ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
புதிய பஞ்.,கள் என்ற அடிப்படையில் அடுத்து வரும் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும். அந்தந்த உள்ளூர் பஞ்., மக்கள், மறுப்பு தெரிவிக்க விரும்பினால் எழுத்து மூலம், அரசிதழில் அறிவிக்கப்பட்ட நாளது முதல், 30 நாளுக்குள், அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம். 'அரசு கூடுதல் தலைமை செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தலைமை செயலகம், சென்னை-9' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

