/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'குட்கா' பதுக்கிய விவகாரத்தில் 3 பேர் கைது
/
'குட்கா' பதுக்கிய விவகாரத்தில் 3 பேர் கைது
ADDED : மே 15, 2024 02:00 AM
ஈரோடு:ஈரோடு,
கருங்கல்பாளையம், கே.எஸ்.நகர் மரப்பாலம் ஐந்தாவது வீதியில்
வசிப்பவர் திருப்பதி, 35; கருங்கல்பாளையத்தில் திருப்பதி ஸ்டோர்ஸ்
வைத்துள்ளார்.
முனிசிபல் சத்திரம் அண்ணா டெக்ஸ் செல்லும் வழியில்
இவரது குடோன் உள்ளது. நேற்று முன்தினம் இங்கு பதுக்கி வைக்கப்பட்ட,
அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை,
சூரம்பட்டி போலீசார், 1,025 கிலோ பறிமுதல் செய்தனர்.
இவற்றை
திருப்பதி மொத்தமாக வாங்கிய, கருங்கல்பாளையம் இந்திரா நகர்
மோசிகீரனார் வீதியை சேர்ந்த முகமது ஜூபேர், 35; புகையிலை பொருட்களை
கடைகளுக்கு சப்ளை செய்த, கருங்கல்பாளையம், கிருஷ்ணம்பாளையம்
ராமமூர்த்தி நகர் மாணிக்கம், 37, ஆகியோரை போலீசார் நேற்று கைது
செய்தனர்.

