ADDED : ஜூன் 29, 2026 05:35 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
ராசாம்பாளையம் சுடுகாடு அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நேற்று
முன்தினம் இரவு மூன்று பேர் நின்றிருந்தனர். அவ்வழியே ரோந்து சென்ற
வீரப்பன்சத்திரம் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்களிடம்
சோதனை செய்ததில், 750 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் ஈரோடு
வில்லரசம்பட்டி ராசாம்பாளையம் செந்தமிழ் நகர் கார்த்திகேயன், 24;
அந்தியூர் மாரியம்மன் கோவில் வீதி பாரதிராஜா, 24; ஈரோடு
மாணிக்கம்பாளையம் சக்தி நகர் பூலான்காடு ரவீந்தர், 21, என தெரிந்தது.
மூவரையும் கைது செய்தனர்.
