ADDED : ஜூன் 29, 2026 05:36 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோட்டை
அடுத்த கஸ்பாபேட்டை பகுதியில், 14 வயது பள்ளி மாணவி, பள்ளி முடிந்து
வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஆள் நடமாட்டமில்லாத பகுதியில்
நின்றிருந்த, 40 வயது மதிக்கதக்க நபர், அந்தரங்க உறுப்புகளை
காட்டி, மாணவியிடம் கையில் ஆபாச சைகை செய்துள்ளார்.
பெற்றோரிடம்
மாணவி தெரிவித்த நிலையில், அவர்கள் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில்
புகார் செய்தனர். போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து,
அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.
