ADDED : ஜூலை 17, 2026 06:16 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு ரயில்வே
ஸ்டேஷன் டிரைவர்கள் தங்கும் அறை அருகே, பீகார் மாநிலத்தை சேர்ந்த சோகன்,
37, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்தார்.
அவரிடம் ஈரோடு
மதுவிலக்கு போலீசார் சோதனை செய்ததில், 450 கிராம் கஞ்சா இருந்தது.
அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஈரோடு
குயவன்திட்டு ஜீவானந்தம் ரோடு கருப்பணன், 34, அறச்சலுார்
நாச்சிவலசு வடக்கு வீதி பூபதி, 19, ஆகியோரிடமும், கஞ்சாவை பறிமுதல்
செய்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
