ADDED : நவ 23, 2026 06:30 AM
அ நிறம் | அளவு
பவானிசாகர்:பவானிசாகரை
அடுத்த தொப்பம்பாளையம் கிரஷர் மேடு பகுதியில், பவானிசாகர் போலீசார்
ரோந்து சென்றனர்.
சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூன்று பேரிடம்
சோதனை செய்ததில், 10 போதை மாத்திரை, ஒரு ஊசி மற்றும் 50 கிராம் கஞ்சா
இருந்தது. விசாரணையில் மூவரும் கோவை மாவட்டம் சிறுமுகை மஞ்சுநாதன்,
28, ஷேக் தாவூத், 25, தொப்பம்பாளையத்தை சேர்ந்த வீராசாமி, 28, என்பது
தெரிந்தது. இதில் வீராசாமி சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும்
தெரிந்தது. போதை பொருட்கள், ஒரு டூவீலரை பறிமுதல் செய்து, மூவரையும்
போலீசார் கைது செய்தனர்.
