ADDED : நவ 23, 2026 06:30 AM
அ நிறம் | அளவு
கோபி,:சத்தியமங்கலம்
அருகே அரியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ், 43; ஹீரோ
ேஹாண்டா பைக்கில் நேற்று முன்தினம் மாலை, இண்டியம்பாளையம் என்ற
இடத்தில் சென்றார்.
கோபியை சேர்ந்த தனுஷ் சபரி பாலாஜி, 18, ஓட்டி வந்த
ஹோண்டா சிட்டி கார், கோபால், 55, என்பவரின், டி.வி.எஸ்., எக்சல் மொபட்
மற்றும் ஆனந்தராஜின் பைக் மீது மோதியது. இதில் ஆனந்தராஜ், கோபால்
மற்றும் காரில் பயணித்த ஹரிபிரசாத், 18, ஆகியோர் காயமடைந்தனர்.
மூவரும் சத்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனந்தராஜ் புகாரின்படி கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
