ADDED : ஆக 04, 2025 08:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிகோயிலை சேர்ந்தவர் செல்வம், 50; ஆடிப்பெருக்கை ஒட்டி காங்கேயம் அருகே மடவிளாகம் கோயிலுக்கு சொந்த லோடு ஆட்டோவில், குடும்பம் மற்றும் உறவினர்கள் என, 12 பேருடன் நேற்று சென்றார்.
பரஞ்சேர்வழி அருகே காலை, 9:30 மணிக்கு சென்றபோது, எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட்டு சாலையோரம் ஒதுங்கிய போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் இளம்பெண்கள் இருவர் உள்பட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். மூவரும் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.