ADDED : அக் 09, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேஷன் கடை ஊழியர்
3 பேர் சஸ்பெண்ட்
ஈரோடு, அக். 9-
ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்ட ரேஷன் கடைகளில் அத்யாவசிய பொருட்கள் வினியோகம் தொடர்பான முறைகேட்டை தடுக்க, கூட்டுறவு துறை அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இதன்படி நடந்த கண்காணிப்பில் ஈரோடு, சூரம்பட்டி திரு.வி.க.சாலை ரேஷன் கடையில் லதா, நம்பியூர் கணேசபுரம் கடையில் இந்திராணி, ஊராட்சிகோட்டை ரேஷன் கடையில் பிரபு ஆகியோர், முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டது. மூவரையும் சஸ்பெண்ட் செய்து, ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார் உத்தரவிட்டார்.

