/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துணிக்கடையில் திருடிய 3 பெண்கள் கைது
/
துணிக்கடையில் திருடிய 3 பெண்கள் கைது
ADDED : அக் 24, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே புதுக்கரைப்புதுாரை சேர்ந்தவர் வடிவுக்கரசி, 44; கோபி எஸ்.டி.என்., காலனியில் துணிக்கடை வைத்துள்ளார். கடைக்கு கடந்த, 12ம் தேதி வந்த நான்கு பெண்கள், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள துணிகளை திருடி சென்றனர்.
வடிவுக்கரசி புகாரின்படி கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் கோபியை சேர்ந்த பவித்ரா, 25, சுசீலா, 22 மற்றும் பாக்கியலட்சுமி, 35, ஆகியோரை, போலீசார் நேற்றிரவு கைது செய்து, கோவை பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கோபியை சேர்ந்த மலர்விழியை, 40, தேடி வருகின்றனர்.

