கட்டப்படும் வீட்டில் காப்பர் ஒயர் திருடிய 3 வாலிபர் கைது
கட்டப்படும் வீட்டில் காப்பர் ஒயர் திருடிய 3 வாலிபர் கைது
ADDED : ஆக 03, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
கஸ்பாபேட்டையை சேர்ந்தவர் சுகுமார், 34, எலக்ட்ரீசியன். ஈரோடு
பூந்துறை சாலை அசோகபுரத்தில் பூபதி என்பவர் புதிதாக வீடு
கட்டுகிறார். இங்கு சுகுமார் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்கிறார். கடந்த,
22ம் தேதி இரவு ஒரு லட்சத்து, 90 ஆயிரம் மதிப்பிலான, 25 மீட்டர்
காப்பர் ஒயரை ஸ்டோர் ரூமில் சுகுமார் பார்த்து விட்டு சென்றார். மறுநாள்
வந்தபோது ஸ்டோர் ரூம் கதவு உடைக்கப்பட்டு ஒயர் திருட்டு
போயிருந்தது.
இதுகுறித்தகு சுகுமார் அளித்த புகாரின்படி ஈரோடு
தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, களவாணிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு குமலன்குட்டை செல்வம் நகர் சுமை தொழிலாளி
சந்தோஷ், 22, இவரது சகோதரர் எலக்ட்ரீசியன் தினேஷ், 20;
சூரம்பட்டியை சேர்ந்த எலக்ட்ரீசியன் நிஷாந்த், 19, ஆகியோரை போலீசார்
கைது செய்தனர்.
